“வாய்தா” என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை தீபா என்கிற பவுலின் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
சென்னை விருகம் பாக்கத்தில் வசித்து வந்தவர் நடிகை பவுலின். 29 வயதான இவர், வாய்தா என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். பல்வேறு திரைப்படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள இவர், டிக் டாக் மூலம் பிரபலமானார். இந்நிலையில், நடிகை பவுலின், தனது வீட்டில் தூக்கிட்டு தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
போலீசார் நடத்திய விசாரணையின்போது நடிகை பவுலின் எழுதிய கடிதம் கிடைத்தது. அதில், தான் ஒருவரை உயிருக்கு உயிராகக் காதலித்ததாகவும், காதல் கைகூடாததால் இந்த உலகத்தை விட்டுப் பிரிந்து செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். சாவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் கடிதத்தில் எழுதியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரபல துணை நடிகை காதல் தோல்வி காரணமாகத் தூக்கிமாட்டிக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவருடைய மரணத்திற்கு திரையுலக சேர்ந்தவர்கள் பலர் தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகிறார்கள்.
உதவிக்கு அணுகவும்: மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104.
Contact for help: State Health Department Helpline Number: 104.







