திருச்சி மாவட்டத்தில் பாஜக காலூன்ற முக்கிய பங்காற்றுவேன் என திருச்சி சிவா மகன் சூர்யா சிவா தெரிவித்துள்ளார்.
திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவும், அக்கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவராகவும் இருப்பவர் திருச்சி சிவா. அவரின் மகன் சூர்யா சிவா நேற்று சென்னை கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை சந்தித்து பாஜகவில் இணைந்தார். திமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரின் மகன், பாஜகவில் இணைந்தது பரபரப்பாக பேசப்பட்டது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த நிலையில் நியூஸ் 7 தமிழுக்கு சூர்யா சிவா அளித்த பேட்டியில், “சித்தாந்தத்தை வைத்து மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடிய கட்சி திமுக. மாற்றுக் கட்சியில் இருந்து திமுகவில் இணைபவர்களுக்கு கால நேரம் இல்லாமல் அங்கீகாரம் அளிக்கிறார்கள்” என்று குற்றம்சாட்டினார்.மக்களை ஈர்க்கக்கூடிய கட்சியாக பாரதிய ஜனதா இருக்கிறது என்றும், வரும் 2024 இல் தமிழகத்தில் 30 நாடாளுமன்ற தொகுதிகளில் தனிப்பட்ட முறையில் பாஜக வெல்லும் எனவும், 15 ஆண்டு கால விரக்தியால் பாஜகவில் இணைந்துள்ளேன், திருச்சி மாவட்டத்தில் பாஜக காலூன்ற முக்கிய பங்காற்றுவேன் என்றும் சூளுரைத்துள்ளார் சூர்யா சிவா.