2020ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இந்தியர்கள்!

2020ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெண்களும் இடம்பிடித்துள்ளனர். 30 நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மார்கெல்…

2020ம் ஆண்டுக்கான உலகின் சக்திவாய்ந்த 100 பெண்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இதில் இந்திய பெண்களும் இடம்பிடித்துள்ளனர்.

30 நாடுகளை சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஜெர்மனி பிரதமர் ஏஞ்செலா மார்கெல் உலகில் சக்திவாய்ந்த பெண்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். தொடர்ந்து பத்தாவது முறையாக அவர் இந்த இடத்தை தக்கவைத்துள்ளார். அதேபோல் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 41வது இடத்தை பிடித்துள்ளார். அவர் கடந்த ஆண்டு இந்த பட்டியலில் 34வது இடத்தை பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் இந்த பட்டியலில் இடம்பிடித்துள்ளார். அதேபோல் பயோகான் நிறுவனர் கிரன் மசும்தர் ஷா, ஹெச்.சி.எல் சி இ ஓ ரோஷினி நாடார் ஆகிய இந்திய பெண்களும் இந்த பட்டியலில் இடம்பிடித்து அசத்தியுள்ளனர். இதில் இடம்பிடித்துள்ளவர்கள் அனைவரும் வெவ்வேறு துறையை சேர்ந்தவர்கள். ஆனால் அவர்கள் அனைவரும் அந்தந்த துறைகளில் காலூன்றி திறம்பட செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 17 பெண்கள் புதிதாக இடம்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply