2020ம் ஆண்டில் ட்விட்டரில் அதிக லைக்ஸ், ரீட்வீட் உள்ளிட்டவைகளில் முதலிடம் பிடித்த ட்வீட்களின் பட்டியலை ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக #Wearamask அதிக அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் மற்றும் ஹத்ராஸ் பாலியல் வன்கொடுமை தொடர்பான ஹேஷ்டேக்குகளும் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. விளையாட்டை பொறுத்தவரை #IPL2020, #WhistlePodu, #TeamIndia ஆகியவை அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. திரைப்படங்களை பொறுத்தவரை ஒரு நிமிடத்திற்கு 7,000 ட்வீட்கள் போடப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.
DilBechara, SooraraiPottru, SarileruNeekevvaru திரைப்பட ஹேஷ்டேக்குகளே 2020ம் ஆண்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளன. நடிகர் விஜய் படப்பிடிப்பின் போது நெய்வேலியில் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் இந்தியாவில் 2020ம் ஆண்டில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட்டாக இருக்கிறது.
அதேபோல் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது மனைவி அனுஷ்கா சர்மா கர்ப்பமாக உள்ளதாக ரசிகர்களுடன் பகிர்ந்த புகைப்படம், அதிக லைக்குகளை பெற்ற ட்வீட்டாக உள்ளது. 2020ம் ஆண்டில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட ட்வீட்டாக அமிதாப் பச்சனின் பதிவு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிரிப்பு, அழுகை, காதல், வணக்கம் உள்ளிட்டவைகளை குறிக்கும் எமோஜிகள் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.







