முக்கியச் செய்திகள் உலகம் விளையாட்டு

ஒரே போட்டியில் 2 உலக சாதனை – ரொனால்டோ அசத்தல்

நேற்று நடைபெற்ற போர்ச்சுகல் – கானா அணிகளுக்கு இடையிலான போட்டியில் நட்சத்திர கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 2 உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

உலகக் கோப்பை கால்பந்து தொடர் 2022, கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. இத்தொடரின் லீக் சுற்றில், நேற்று போர்ச்சுகல் அணி கானா அணியுடன் மோதியது. போர்ச்சுகல் அணியின் கேப்டனும், உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக வலம் வருபவருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ களமிறங்குவதால் மிகுந்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் இப்போட்டி கிளப்பியது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு தீனி போடும் விதமாக 30வது நிமிடத்தில் நட்சத்திர வீரர் ரொனால்டோ கோல் அடித்தார். ஆனால் ஃபவுல் காரணமாக இது கோல் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காமல் 0-0 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி சூடு பிடித்தது. 65-வது நிமிடத்தில் போர்ச்சுகலுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி கிறிஸ்டியானோ ரொனால்டோ கோல் அடித்தார். 73வது நிமிடத்தில் கானா வீரர் ஆந்த்ரே அயிவ் கோல் அடித்து ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்து போட்டிக்கு மேலும் விறுவிறுப்பைக் கூட்டினார். இதனையடுத்து போர்ச்சுகல் அணியின் ஜோவ் பெலிக்ஸ் 76வது நிமிடத்திலும், ரபெல் லியோ 78வது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். 89வது நிமிடத்தில் கானா வீரர் ஒஸ்மான் புகாரி கோல் அடித்தார். ஆட்டத்தின் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி கானா அணியை வீழ்த்தி, வெற்றி பெற்றது.

இந்த போட்டியின்போது, 3 புள்ளி ஒரு மீட்டர் உயரம் குதித்து ஹெட்டிங் செய்து கிறிஸ்டியானோ ரொனால்டோ புதிய சாதனை படைத்தார். இதன்மூலம், ஏற்கனவே அவர் 2 புள்ளி ஒன்பது மூன்று மீட்டர் குதித்த சாதனை முறியடிக்கப்பட்டது. மேலும், 5 உலக கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற சாதனையும் 37 வயதான ரொனால்டோ தனதாக்கிக் கொண்டார். மொத்தத்தில், அவர் உலக கோப்பையில் அடித்த 8வது கோல் இதுவாகும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டில் புதிதாக 1,551 பேருக்கு கொரோனா

Gayathri Venkatesan

தமிழ்நாடு காட்டுயிர் வாரியத்திற்கு புதிய உறுப்பினர்கள்

EZHILARASAN D

4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

EZHILARASAN D