தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், இரண்டு தேர்தல் செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான, தலைமைத் தேர்தல் ஆணையத்தின் சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி அலோக் வர்தன் நியமிகப்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
தமிழக தேர்தலுக்கான, காவல்துறை சிறப்பு பார்வையாளராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி தர்மேந்திர குமார் நியக்கப்பட்டுவதாகவும் அவர் அறிவித்தார். தமிழகத்தில் தேர்தல் செலவுகள் அதிகமாக இருக்கும் என்பதால், தேர்தல் செலவின பார்வையாளர்களாக மதுமாதன் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகிய இரண்டு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தலைமைதேர்தல் ஆணையர் தெரிவித்தார்.







