கேரளாவில் மர்ம காய்ச்சலில் 2 பேர் உயிரிழந்த நிலையில் அவர்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் தொடர்பில் இருந்த மேலும் நான்கு பேருக்கு நிபா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடம்மாக உள்ளதாக தெரியவந்துள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியதையடுத்து கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிபா வைரஸ் காய்ச்சலுக்காக 75 படுக்கைகள் கொண்ட வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஐசியூ வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த இருவரின் தொடர்பில் இருந்த 75 பேரையும் தனிமைப்படுத்தி தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் வீடு அமைந்துள்ள வார்டு பகுதிகள் சீல் வைக்கப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள நான்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நிபா காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய குழு விரைவில் கேரளா வர உள்ளது.