‘சந்திரமுகி -2’ திரைப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வருகிறார். மேலும் வடிவேலு, கங்கனா ரணாவத் ராதிகா, வடிவேலு, லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே, ரவிமரியா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இப்படம் செப்.28 அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த ஆகஸ்ட் 25-ம் தேதி நடைபெற்றது. இந்த படத்தில் மொத்தம் 10 பாடல்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் வெளியீடு பற்றி ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.
இந்நிலையில், இப்படத்தின் அடுத்த பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘சந்திரமுகி -2’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘தோரி போரி’ பாடலின் லிரிக் வீடியோ நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளது.
A touching family song 'Thori Bori' from Chandramukhi-2 🗝️ about life's simple joys is coming your way! 🫰🏻🌻
Get ready to be moved by ‘THORI BORI’ 👪 – releasing tomorrow at 5PM. 🕔🎶
A @mmkeeravaani musical 🎻✨
✍🏻🎶 @YugabhaarathiYb
🎤 @HaricharanMusic @amalachebolu… pic.twitter.com/TgMtGWEb0W— Lyca Productions (@LycaProductions) September 12, 2023