முக்கியச் செய்திகள் தமிழகம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 பார்வையாளர்கள் நியமனம்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கு பார்வையாளர்களை நியமித்து, தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான திருமகன் ஈவேரா கடந்த ஜனவரி 4-ஆம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, அதற்கு பிப்ரவரி 27ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். அமமுக சார்பில் சிவபிரசாத், தேமுதிக சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் வேட்பளார்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அதிமுக சார்பில் விரைவில் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்கியது. பிப்ரவரி 7-ம் தேதியுடன் வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைவதுடன், பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும் நடைபெறுகிறது.

இந்நிலையில், பார்வையாளர்களாக ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார் யாதவ், ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும், இவர்கள் இருவரும், வரும் 7ம் தேதி முதல் பணியில் ஈடுபடுவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கோலாகலமாக நடந்த பொன்னர் – சங்கர் கோயில் மாசித் திருவிழா!

Web Editor

2வது நாள் ஆய்வுக்கும் ஒத்துழைக்க மறுத்த தீட்சிதர்கள்

Web Editor

நெல்லை : அனுமதி பெற்ற குவாரிகள் மட்டுமே செயல்படவேண்டும் – நீதிமன்றம்

Dinesh A