ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த 2 கொலைகள்… கோவில்பட்டியில் பயங்கரம்!

கோவில்பட்டியில் ஒரே இரவில் அடுத்தடுத்து 2 கொலைகள் நடைபெற்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள டாஸ்மாக் அருகே நேற்று (ஜுன் 1) இரவு வள்ளுவர் நகரைச் சேர்ந்த பிரகதீஸ் (20) என்பவர் நின்றுக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரகதீஸை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓடினர். இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இந்த சம்பவம் நடந்த அரைமணி நேரத்திற்குள் செண்பா நகர் 3வது தெருவைச் சேர்ந்த கஸ்தூரி எனபவர் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கஸ்தூரியையும், அவரது சகோதரர் செண்பகராஜ் ஆகியோரை அரிவாளால் வெட்டினர். இதில் கஸ்தூரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். படுகாயம் அடைந்த செண்பகராஜ் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். படுகொலை செய்யப்பட்ட கஸ்தூரி டைப்பிங் இன்ஸ்டியூட் மற்றும் இ.சேவை மையம் நடத்தி வந்தார்.

கோவில்பட்டியில் ஒரே இரவில் நடந்த கொலை சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு உடல்களையும் மீட்ட கிழக்கு காவல் நிலைய போலீசார் இதுகுறித்து தீவிர நடத்தி வருகின்றனர். பதிலுக்கு பதில் கொலை சம்பவம் நடைபெற்றுள்ளதா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.