நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என கருரில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் 100 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவுக்கு தடகளத்தில் தங்கம் வென்று வரலாறு படைத்த நீரஜ் சோப்ரா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தற்போது தமிழ்நாடு கரூரில் நீரஜ் என்ற பெயர் கொண்டவர்களுக்கு 2 லிட்டர் பெட்ரோல் இலவசம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கரூர், சுங்ககேட் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் “நீரஜ்” என்ற பெயர் உள்ளவர்கள் தங்கள் பெட்ரோல் பங்க் வந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்படும் எனவும், ஆதார் அட்டை கொண்டு வர வேண்டுமென அறிவித்துள்ளனர்.
ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.








