தமிழ்நட்டில் இதுவரை 2 கோடி மின் நுகர்வோர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்னர்.
மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம், கடந்த அக்டோபர் மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, நவம்பர் மாதம் 28-ம் தேதி முதல் மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். ஜனவரி மாதம் 31-ம் தேதி வரை மின்வாரிய அலுவலகங்களில் சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இணையதளம் மட்டுமின்றி, மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். மின் நுகர்வோர் வீட்டுக்கே சென்று மின் இணைப்பை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகளையும் மின் வாரிய ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் 2,67,68,800 மின் நுகர்வோர்கள் உள்ள நிலையில் 2,00,61,094 நுகர்வோர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர். அதாவது மொத்த மின் நுகர்வோரில் 74.94% மின் நுகர்வோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைத்துள்ளனர்.