தென்காசி அருகே 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 6 பேர் உயிரிழப்பு!

கடையநல்லூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்திற்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 5 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிறுவர்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் மீட்பு படையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே விபத்தில் காயமடைந்தவர்களில் சிலரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனியார் பேருந்துகள் போட்டி போட்டு கொண்டு சென்றதால் விபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த பகுதியில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.