இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியின் 2வது இன்னிங்சிலும் ஆஸ்திரேலியா ரன் எடுக்க முடியாமல் திணறி வருகிறது.
மெல்போர்னில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 195 ரன்களில் சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி வீரர்கள் பொறுமையாக விளையாடி ரன் சேர்த்தனர். கேப்டன் ரகானே 112 ரன்கள் எடுத்து அசத்தினார். ரவீந்திர ஜடேஜா 57 ரன்களும், சுப்மான் கில் 45 ரன்களும் எடுத்தனர். 3ம் நாளான இன்று இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
ஆஸ்திரேலியாவை விட இந்திய அணி 131 ரன்கள் முன்னிலை பெற்றது. இதையடுத்து ஆஸ்திரேலியா தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரராக இறங்கிய மாத்யூ வேட் அதிகபட்சமாக 40 ரன்கள் எடுத்தனர். எஞ்சிய வீரர்கள் இந்திய அணி பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 3ம் நாள் ஆட்டநேர முடிவில், ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 133 ரன்களுடன் தத்தளித்து வருகிறது. 3ம் நாள் முடிவில், இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஆஸ்திரேலியா 2 ரன்களே முன்னிலை பெற்றுள்ளது.







