நடப்பு கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும்; அமைச்சர் செங்கோட்டையன் தகவல்!

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அரும்பாக்கத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,…

10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சென்னை அரும்பாக்கத்தில் மினி கிளினிக்கை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நடப்பு கல்வியாண்டு, பூஜ்யம் கல்வியாண்டாக அறிவிக்கப்படாது என தெரிவித்தார். 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நிச்சயம் நடைபெறும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிகள் திறப்பு தொடர்பாக பெற்றோர் மற்றும் கல்வியாளர்களிடம் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

அண்டை மாநிலங்களில் பள்ளிகளை திறந்தவுடன், மீண்டும் மூடப்பட்டதாக கூறிய அமைச்சர் செங்கோட்டையன், சூழலைப் பொறுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவு எடுப்பார் என தெரிவித்தார். கல்வித் தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படம், காவி நிறத்தில் இடம்பெற்றது தொடர்பாக பேராசிரியரிடம் விளக்கம் கேட்பட்டுள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply