மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி –  இந்தியா அபார வெற்றி ..!

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சு காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது.  இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான   முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில்  நடைபெற்றது. டாஸ் வென்று முதலில்…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் அபார பந்து வீச்சு காரணமாக ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. 
இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான   முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில்  நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் ஆடிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அஸ்வின் 5  விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதனைத்தொடர்ந்து  இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 421 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் 271 ரன்கள் இந்திய அணி முன்னிலை பெற்றது. ஜெய்ஸ்வால் 171 ரன், ரோகித் சர்மா 103 ரன், விராட் கோலி 76 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.  ஆனால் அஸ்வின், ஜடேஜாவின் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி வீரர்கள் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். இதனால் அந்த அணி 130 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது.
அதிகபட்சமாக அலிக் அதான்சே 28 ரன்களும், ஜாசன் ஹோல்டர்  20 ரன்கள்  சேர்த்தனர். இதன்மூலம் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 141 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அஸ்வின் 7 விக்கெட், ஜடேஜா 2 விக்கெட்டும் கைப்பற்றினார். முதல் டெஸ்ட் சதம் அடித்த ஜெய்ஸ்வால் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.