நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில்…

இந்தியா-நியூசிலாந்துக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா- இலங்கை இடையில் நடந்த 3 ஒரு நாள் போட்டி மற்றும் டி 20 போட்டி தொடர்கள் இரண்டையும் இந்திய அணி கோப்பையை வென்று வெற்றி கொண்டாட்டத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான 3 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அதே உத்வேகத்துடன் இன்று இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையேயான ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

இந்தியா அணியில், ரோகித் சர்மா (கேப்டன்) சுப்மான் கில், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர் அல்லது ஷபாஸ் அகமது, குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல், முகமது ஷமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

நியூசிலாந்து அணியில், பின் ஆலென், டிவான் கான்வே, மார்க் சாப்மேன் அல்லது ஹென்றி நிகோல்ஸ், டேரில் மிட்செல், டாம் லாதம் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், மைக்கேல் பிரேஸ்வெல், மிட்செல் சான்ட்னெர், ஹென்றி ஷிப்லி அல்லது டக் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி அல்லது பிளேர் டிக்னெர், லோக்கி பெர்குசன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.