இந்தியா-சீனா எல்லையில் காணாமல்போன 18 தொழிலாளர்கள் – ஒருவர் உடல் கண்டெடுப்பு

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச…

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சல் மாநிலத்தில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 18 தொழிலாளர்களை கடந்த 14 நாள்களாக காணவில்லை. ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்தியா – சீனா எல்லையில் அருணாச்சலப் பிரதேச மாநிலம், குருங்குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இதில், கடந்த ஜூலை 5ஆம் தேதி முதல் 19 தொழிலாளர்களைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த காவல் துறையினர் காணாமல்போனா தொழிலாளர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

தேடும் பணியின்போது, இந்தியா – சீனா எல்லையையொட்டி உள்ள தமின் பகுதியில் புராக் ஆற்றில் இருந்து ஒருவரின் சடலம் மட்டும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், காணாமல் போனவர்களில் பெரும்பாலோனோர் இஸ்லாமியர்கள் என்றும், கடந்த ஜூலை 5ஆம் தேதி அவர்கள் பக்ரீத் பண்டிகையைக் கொண்டாட பணியிடத்தைவிட்டுச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து, உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.