ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேர் விடுதலை! இலங்கை நீதிமன்றம் உத்தரவு!

கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி…

கடந்த 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் 18 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த 8 ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று சுமார் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை இரண்டு விசைப்படகையும்,  அதில் இருந்த 19 மீனவர்களை கைது செய்தனர்.  பின்னர்,  காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று,  ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

இதையும் படியுங்கள் : அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்கள் வரும் 26ம் தேதி திறப்பு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

இதையடுத்து,  இன்று சிறைக்காவல் தேதி முடிந்து மீண்டும் 19 மீனவர்களை ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதில் மீனவர்களை விசாரணை நடத்திய நீதிபதி,  மீனவர்கள் 18 பேரையும் விடுதலை செய்து உத்தரவு விட்டுள்ளார்.

இதில்,  படகோட்டிக்கு ஒருவருக்கு மட்டும் 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.  இந்நிலையில், விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் இன்னும் ஓரிரு தினங்களில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.