முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம்

“இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய்”

இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக
மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

புற்றுநோய் சிகிச்சையை மேம்படுத்துவது குறித்த புற்றுநோய் மருத்துவ
நிபுணர்களுக்கான தேசிய அளவிலான கருத்தரங்கம் மதுரையில் நடைபெற்றது. நாடு
முழுவதுமிருந்து 100க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட இந்த
கருத்தரங்கில், புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை எப்படி கட்டுப்படுத்துவது,
பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிப்பது குறித்து
ஆலோசிக்கப்பட்டது.புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ராஜ்குமார் கூறுகையில் “இந்தியாவில் 18 சதவீத பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்பு இருப்பதாக மருத்துவ ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலும் சுற்றுச்சூழல் மாசு, பாரம்பரிய உணவு பழக்கவழக்கத்தின் மாற்றம், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளிட்ட காரணங்களால் மார்பக புற்றுநோய் ஏற்படுவதாக கூறினர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

மருத்துவ நிபுணர்கள் இதனை தடுக்க உணவு பழக்கவழக்கங்களை மீண்டும் பாரம்பரிய முறையில் மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்துகின்றனர், மேலும் ஆரம்ப நிலையில் கண்டறிய பெண்கள் அடிக்கடி மார்பக புற்றுநோய் குறித்து சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் ஆரம்ப நிலையில் கண்டறிந்து உடனடி சிகிச்சை பெற்றால் பூரண குணமடைய முடியும்  என கூறினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

காவல்நிலையம் அருகே இரு சக்கர வாகனம் திருட்டு

EZHILARASAN D

பாஜகவில் இணைந்த ரஜினி ரசிகர்கள்

Web Editor

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் இன்று ஆலோசனை

G SaravanaKumar