72,000 முறை பிரதமர் மோடியின் பெயரை எழுதி ஓவியம் வரைந்து பள்ளி மாணவன் சாதனை!

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் வரைந்து சாதனை படைத்துள்ளார். தனியார் மாலை நேர பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன்…

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை
முன்னிட்டு அவரது ஓவியத்தை வரைந்து பள்ளி மாணவன் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

தனியார் மாலை நேர பயிற்சி பள்ளியில் பயின்று வரும் மாணவன் சாருகேஷ், பிரதமர்
நரேந்திர மோடியின் பிறந்த நாளை போற்றும் வகையில் 17 மணி நேரத்தில் அவர் பிறந்த
மாதமான ஒன்பதாவது மாதத்தை நினைவு கூறும் வகையில் 9 அடியிலும் சுமார் 72,000
முறை அவரது பெயரை பயன்படுத்தியும் ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன்னர் சுதந்திர தினத்தன்று கல் உப்பால் மோடியின் படம் வரைந்து சாதனை
படைத்த மாணவன் சாருகேஷ் தற்போது அவரது பிறந்த நாளை போற்றும் வகையில் அவரது பெயரை பயன்படுத்தி ஓவியம் வரைந்து சாதனை படைத்துள்ளார்.

இப்பள்ளி மாணவனை ஆசிரியர்கள் பெற்றோர்கள் பொதுமக்கள் என பலரும் பாராட்டி
வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.