கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற 17-வது தென்னிந்திய அளவிலான யோகாசனப் போட்டியில் 650-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பங்கேற்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் 17வது யோகா பிரதர்சன் தென்னிந்திய
அளவிலான போட்டியில் தமிழ்நாடு ஆந்திரா கேரளா கர்நாடகா பாண்டிச்சேரி
தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து 650க்கும்
மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பல்வேறு விதமான யோகாசனங்களை செய்து காட்டி அசத்தினர்.
பின்னா் ஒட்டுமொத்த அளவில் அனைத்து பிரிவுகளின் கீழ் சென்னை SAN அணி முதலிடம் பெற்றது. மேலும் ஆண்களுக்கான தனிநபர் பிரிவில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த நகுலன் முதலிடம் பிடித்தார்.பெண்கள் தனிநபர் பிரிவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த லலிதாம்பிகா முதலிடம் பெற்றார்.
ரூபி.காமராஜ்







