தூத்துக்குடியில் ஆண் நண்பர்களுடன் பழகுவதை கண்டித்த தாயை, கொலை செய்த 17 வயது சிறுமி உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் முனியலட்சுமி என்பவர் வசித்து வந்தார். துய்மை பணியாளராக பணியாற்றி வந்த இவர், கணவரை பிரிந்து தனது 17 வயது மகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் முனியலட்சுமியின் மகள் அப்பகுதியில் உள்ள ஆண் நண்பர்களுடன் பழகி வந்ததை, தாயார் கண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து தாயை கொலை செய்ய முடிவு செய்த சிறுமி தனது ஆண் நண்பர்களுடன் சேர்ந்து, வீட்டில் தூங்கி கொண்டிருந்த தனது தாயை கடுமையாகத் தாக்கி, பின்னர் கழுத்தை நெறித்து கொலை செய்தாக கூறப்படுகிறது. இதையடுத்து, தனது தாயை யாரோ கொலை செய்து விட்டதாக போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
அண்மைச் செய்தி: “களக்காடு அருகே ஆசிரியர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு”
பின் போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணையில், தம்மை பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தியதால், தனது தாயை கொன்றதாக சிறுமி, தெரிவித்தார். இதையடுத்து சிறுமி மற்றும் அவரது ஆண் நண்பர்கள் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.








