நடிகர் பிரபாஸ் நடிக்கும் ப்ராஜக்ட் கே படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது ஷங்கர் இயக்கும் இந்தியன் 2′ படத்தில் கமல் நடிப்பில் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறார். அதன் பிறகு கமல் எச்.வினோத் இயக்கத்தில் ‘KH 233’ மற்றும் பின்னர் மணிரத்னம் இயக்கத்தில் ‘KH 234’ இல் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
இந்நிலையில், கமல், அடுத்து ப்ராஜக்ட் கே படத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்காகக் கமலிடம் 20 நாட்கள் கால்ஷீட் கேட்கப்பட்டுள்ளதாகவும் அவருக்கு சுமார் 150 கோடி சம்பளமாக பேசப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
சயின்ஸ் ஃபிக்ஷன் கதையாக உருவாகி வரும் இந்த படத்தில் பாலிவுட் டோலிவுட் திரையுலகைச் சேர்ந்த முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.