காங்கிரஸ் கட்சியை, திமுக சுமையாக கருதுகிறது: ஸ்ரீநிவாசன்

தமிழகத்தில் தனித்து நிற்க முடியாமல், இடதுசாரி கட்சிகள் திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய…

தமிழகத்தில் தனித்து நிற்க முடியாமல், இடதுசாரி கட்சிகள் திமுகவுடன் ஒட்டிக் கொண்டிருப்பதாக பாஜக மாநில பொது செயலாளர் ஸ்ரீநிவாசன் விமர்சித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் ஸ்ரீநிவாசன் கலந்து கொண்டார். பின்னர் பேசிய அவர், ஜோதிடத்தில் ராகு, கேதுவுக்கு சொந்த வீடு இல்லாதது போல, தமிழகத்தில் சொந்த பலம் இல்லாத கட்சிகளாக சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளதாக விமர்சித்தார்.

காங்கிரஸ் கட்சியை, திமுக சுமையாக கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக மீண்டும் தோல்வியை சந்திப்பது உறுதி எனவும் ஸ்ரீனிவாசன் தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply