சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்ற வருகிறது. அதன்படி கொந்தகையில் நடைபெறும் அகழாய்வில் 15 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் ஒன்பதாம் கட்ட அகழாய்வு பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி தொடங்கி வைத்தார்.கீழடியில் மட்டும் 16 குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் அகரம் கொந்தகை உள்ளிட்ட பகுதிகளிலும் நான்கிற்கும் மேற்பட்ட குழிகள் வெட்டப்பட்டு அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது.
கொந்தகை அகழாய்வு பணிகளில் ஏற்கனவே முதுமக்கள் தாழிகள் அதிக அளவில் கிடைத்த நிலையில், தற்போது புதிதாக வெட்டப்பட்ட நான்கு குழிகளில் ஒரு குழியில் மட்டும் 15 க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளது. இந்த முதுமக்கள் தாழிகள் இரண்டு அடியிலேயே தென்படத் தொடங்கிய நிலையில் முழுமையாக முதுமக்கள் தாழிகள் விரைவில் தோண்டி எடுக்கப்படும் என தொல்லியல் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







