முக்கியச் செய்திகள் செய்திகள்

இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா

இந்தியாவில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் காரணமாக பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், தற்போது சற்று குறைந்து வருவது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. தொற்று தடுப்புக்காந முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்டவற்றை பொதுமக்கள் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர். தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் புதிதாக 13,615 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 4,36,22,651 போர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,25,474 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.20 சதவீதமாக உள்ளது.

நாடு முழுவதும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,31,043ஆக உயர்ந்துள்ளது.  தொற்றில் இருந்து 13,265 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,29,96,427ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோரின் விகிதம் 98.50 சதவீதமாக உள்ளது.

இதுவரை நாட்டில் 199 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 10,64,038 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரின்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம்!

Vandhana

ஜெய்ஹிந்த் விவகாரத்தை பிரதமரிடம் கூறினோம்: எல்.முருகன் பேட்டி

EZHILARASAN D

பீட்ஸா டெலிவரி செய்யும் ஆப்கானின் முன்னாள் அமைச்சர்

Gayathri Venkatesan