முக்கியச் செய்திகள் தமிழகம்

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எப்போது நடக்கும்?

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிப்பு வந்த பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை எப்போது நடத்துவது குறித்த அவசர ஆலோசனை கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.

தமிழக முதலமைச்சார் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிகல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா, ஆணையர் நந்தகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

சி.பி.எஸ்.இ. 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர்பான அறிவிப்பு வெளியான பிறகு தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனவும், கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீதான புகார்கள் குறித்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழுவை வலுப்படுத்தவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement:

Related posts

பாஜகவில் இணைந்தார் இளம் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா!

Ezhilarasan

கேந்திரிய வித்யாலயாவில் தமிழ் புறக்கணிப்பு: மாநிலங்களவையில் திருச்சி சிவா கேள்வி!

Jayapriya

கொரோனா விழிப்புணர்வு: மூக்கு வழியாக 100 பலூன்களை ஊதி சாதனை!

Dhamotharan