செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் அனுமதி!

மத்திய கல்வித்துறை அமைச்சர் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக எய்ம்ஸ் மருத்துவமைனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், தற்போது தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தியுள்ளதையடுத்து பாதிப்பு சற்றே குறைந்து வருகிறது. இச்சூழலில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு எஸ்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது நாடு முழுவதும் 2,81,75,044 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,27,510 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து டெல்லி, உ.பி போன்ற மாநிலங்களில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரமேஷ் பொக்ரியாலுக்கு சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து ஏற்பட்ட உடல் நலக்கோளாறு காரணமாக இன்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றால் 2,795 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement:

Related posts

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு!

Gayathri Venkatesan

“வணிகர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றும் கட்சிக்கே ஆதரவு” – விக்கிரமராஜா

Niruban Chakkaaravarthi

புதுவகையான தாவரத்திற்கு சரத் பவார் பெயர் சூட்டப்பட்டது!

Gayathri Venkatesan