நாட்டில் ஒரே நாளில் 12,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து…

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு மீண்டும் 12 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் அண்மைக் காலமாக கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த வாரம் 7,000 முதல் 10,000 வரை என தினசரி கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தது.

இதையும் படியுங்கள் : தமிழ்நாட்டில் விதிகளை மீறி தரம் உயர்த்தப்பட்ட 515 அரசுப் பள்ளிகள் – தணிக்கைத் துறை அறிக்கையில் தகவல்!

இந்நிலையில் இந்தியாவில் ஒரே நாளில் 12,193 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 67,556 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 42 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனா பாதிப்பில் இருந்து 10 ஆயிரத்து 765 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தொடர்ந்து தொற்று அதிகரித்து வருவதால் பொது இடங்களில், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலும் அனைத்து மருத்துவமனைகளிலும் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.