சென்னையில் திடீர் மழை…..வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் மக்களை…

சென்னையில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்துள்ளது. இதனால் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கோடை காலம் தொடங்கிய நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக சென்னையில் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது.

இந்நிலையில் இன்று தமிழ்நாடு மற்றும் புதுவையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. நாளை 15 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தது.

இந்நிலையில், சென்னையில் பல பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. சென்னை எழும்பூர், சென்டிரல், புரசைவாக்கம், வடபழனி, சாலிகிராமம், விருகம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று மதியம் லேசான மழை பெய்தது.சென்னை புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, திருமுல்லைவாயல் ஆகிய பகுதிகளில் திடீர் மழை பெய்தது. பூந்தமல்லி, திருமழிசை, போரூர், கோயம்பேடு, மாங்காடு ஆகிய பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.

சென்னையில் கடந்த ஒரு வார காலமாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது திடீரென மழை பெய்தது பொது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த மழை காரணமாக கோடை வெயில் சற்று தணிந்தது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.