முக்கியச் செய்திகள் தமிழகம்

சேலத்தில் 120 கிராமங்களில் போதை பொருட்கள் இல்லை – டிஜிபி தகவல்

சேலம் சரகத்தில் 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு காவல்துறையில், சேலம் சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு
சேலம் மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பரிசளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்டார். இவ்விழாவில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

முன்னதாக பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட பணம், நகை, செல்போன்கள்,
இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் அனுமதியின்றி வைத்திருந்த நாட்டு
துப்பாக்கிகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, ”சேலம் மாநகரில் தற்போது 40 சதவிகிதம் கொலை வழக்குகள் குறைந்துள்ளது. லாட்டரி விற்பனை மற்றும் போதை பொருட்கள் தடை செய்வதில் சேலம் சரகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் சேலம் சரகத்தில் தற்போது வரை 120 கிராமங்கள் போதை பொருட்கள் இல்லாத கிராமங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.போதைப்பொருள் இல்லாத மாவட்டங்களாக சேலம் சரகத்தை உருவாக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

கோவை கார் வெடிப்பு சம்பவம் போன்ற சட்டம் ஒழுங்கு பிரச்னை சமயங்களிலும், பண்டிகை காலங்களிலும், காவலர்களுக்கான கட்டாய வார ஓய்வு வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதை சரி செய்யவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என்று தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட் தேர்வு விலக்கு பெறுவதில் தாமதம் கூடாது – அன்புமணி ராமதாஸ்!

Web Editor

இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் இந்திய அணி வெற்றி

G SaravanaKumar

தமிழகத்திற்கு ரூ.1,188 கோடி ஜிஎஸ்டி நிலுவைத் தொகை விடுவிப்பு

Web Editor