நாய்க்கு உணவு அளிக்காத இளைஞரை கொன்ற உறவினர்​

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நாய்க்கு உணவு கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார். கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத், ஹக்கீம். உறவினர்களான…

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் நாய்க்கு உணவு கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் இளைஞரை அடித்து கொன்ற உறவினர் கைது செய்யப்பட்டார்.

கேரள மாநிலம் பாலக்காடு அருகே பட்டாம்பி பகுதியைச் சேர்ந்த ஹர்ஷத், ஹக்கீம். உறவினர்களான இருவரும் ஒரே அறையில் தங்கியிருந்தனர். இவர்கள் வளர்த்து வந்த நாய்க்கு கடந்த இரு தினங்களுக்கு முன்பு உணவு அளிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது ஹக்கீம் நாயின் சங்கிலி மற்றும் உருட்டு கட்டையால் ஹர்ஷத்தை கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த ஹர்ஷத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஹர்ஷத் கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்ததாக ஹக்கீம் கூறினாலும் படுகாயத்தை கண்ட மருத்துவர்களுக்கு எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். இதற்கிடையே ஹர்ஷத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.காவல் துறையின் தீவிர விசாரணையில் ஏற்கனவே பலமுறை ஷர்த்தை, ஹக்கீம் தொடர்ந்து பலமுறை தாக்கி வந்ததும், தற்போது நாய்க்கு உணவு அளிப்பதால் ஏற்பட்ட பிரச்னையில் தாக்கியதால் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து ஹக்கீமை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.