12 ஐபிஎஸ் அதிகாரிகள் திடீர் இடமாற்றம்

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபியாக கரண் சின்ஹா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண்…

தமிழகத்தில் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தீயணைப்பு மற்றும் மீட்பு பணி டிஜிபியாக கரண் சின்ஹா, தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி வாரிய தலைவர் மற்றும் மேலாண் இயக்குநராக ஏ.கே.விஸ்வநாதன், குற்றப் புலனாய்வுப் பிரிவு ஏடிஜிபி ஆக ஆபாஷ்குமார், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய உறுப்பினராக சீமா அகர்வால், அமலாக்கத்துறை ஏடிஜிபி ஆக சந்தீப் ராய் ரத்தோர், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஆக வன்னியபெருமாள் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

காவல்துறை நலப்பிரிவு ஏடிஜிபி ஆக சைலேஷ் குமார் யாதவ், கடலோர பாதுகாப்பு குழும ஏடிஜிபி ஆக சந்தீப் மிட்டல், போலீஸ் தலைமையகம் ஏடிஜிபி ஆக சங்கர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

செயலாக்கப்பிரிவு கூடுதல் டிஜிபி ஆக அமல்ராஜ், சமூக நலன் மற்றும் மனித உரிமைத்துறை ஏடிஜிபி ஆக ஜெயராம் ஆகியோரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.