முக்கியச் செய்திகள் தமிழகம்

11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வுகள் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். இதில், 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் இந்த மாதம் 13ம் தேதி தொடங்குகிறது. இதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 14 ஆம் தேதி தொடங்கவுள்ளது. இதற்கு முன்னதாக மார்ச் 1 முதல் 9க்குள் செய்முறைத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களே வெளியிட்டு அதனை நடத்தவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

அதன்படி கணினித்துறை, உயிரியல், தொழிற்கல்வி உள்ளிட்ட துறைகளை சேர்ந்த மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளையும் சேர்த்து மொத்தம் 5 ஆயிரம் ஆய்வகங்களில் செய்முறைத் தேர்வுகள் நடைபெறுகின்றன. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் செய்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை அரசு மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் அனைத்தும் சேர்த்து 406 பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் நடக்கிறது. முதல் பேட்சாக 158 பள்ளிகளில் இன்று முதல் மார்ச் 4ம் தேதி வரையும், அடுத்த பேட்சாக 145 பள்ளிகளில் மார்ச் 6ம் தேதி முதல் 9 தேதி வரையும் செய்முறை தேர்வுகள் நடக்க உள்ளன. முறையான ஆய்வக வசதி இல்லாத பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் அருகில் இருக்கும் பள்ளிகளில் செய்முறை தேர்வுகள் எழுதுகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

நீட்: அனைத்துக் கட்சி கூட்டத்திலிருந்து பாஜக வெளிநடப்பு

Halley Karthik

மாரியப்பன் தங்கவேலுவுக்கு அரசு பணி; பணி ஆணையை வழங்கினார் மு.க.ஸ்டாலின்

Halley Karthik

கிருத்திகா பட்டேல் கடத்தல் வழக்கு – தந்தை உள்ளிட்ட 8 பேரின் மனுக்கள் தள்ளுபடி

G SaravanaKumar