முக்கியச் செய்திகள் தமிழகம்

70வது பிறந்தநாள்; அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

70வது பிறந்தநாளையொட்டி மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி, நினைவிடங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தனது 70வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துக்கள் கூறிவருகின்றனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்கவும் : 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

தனது பிறந்த நாளையொட்டி சென்னை மெரினாவில் அமைந்துள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மெரினாவில் அமைந்துள்ள கருணாநிதி நினைவிடத்தில் “மார்ச் 1 திராவிட பொன்நாள்”, “முயற்சி முயற்சி முயற்சி அதுதான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்” என அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து வேப்பேரியில் அமைந்துள்ள பெரியார் நினைவிடம், கீழ்ப்பாக்கத்தில் பேராசிரியர் அன்பழகன் இல்லத்தில் அவரது உருவப்படத்திற்கும் மரியாதை செலுத்தவுள்ளார். பின்னர் கோபாலபுரம், சி ஐ டி காலனி இல்லங்களில் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி தனது தாயார் தயாளு அம்மாளிடம் வாழ்த்துப்பெறுகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

கருணாநிதியின் பிறந்த நாட்களில் மாலையில் பொதுக்கூட்டம் நடைபெறுவது போன்று முதன்முறையாக மு.க. ஸ்டாலின் பிறந்த நாளிலும் பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ.திடலில் மாலை 5 மணிக்கு அகில இந்திய தலைவர்கள் கலந்துகொள்ளும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

தொடர் மழை எதிரொலி; 59 விமானங்கள் தாமதம்

EZHILARASAN D

‘முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை’ இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகளுக்கு தடை!

Saravana

ஹைதி நிலநடுக்கம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,941 ஆக அதிகரிப்பு

Gayathri Venkatesan