ஆண்டுக்கு 2 முறை பொதுத் தேர்வு! மத்திய கல்வி அமைச்சகம்!

மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது. புதிய கல்வித் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும்…

மாணவர்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

புதிய கல்வித் கொள்கையின் அடிப்படையில் வடிவமைக்கப்படும் 2024 பாட புத்தகங்கள், ஆண்டுக்கு இரண்டு முறை தேர்வு எழுதும் வகையில் மாற்றி அமைக்கப்படும் என்று தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு குழு தெரிவித்துள்ளது.

மாணவர்களின் புரிதல் மற்றும் திறனை மதிப்பீடு செய்யும் வகையில் நடத்தப்படும் இரண்டு பொதுத் தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கிறார்களோ அதனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 11, 12-ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டு மொழிப் பாடங்களை படிக்க வேண்டுமென்றும், அதில் ஒன்று கட்டாயம் இந்திய மொழியாக இருக்க வேண்டுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.