‘விஜய் 68’ குறித்து அவ்வப்போது ஒவ்வொரு தகவல்களாக வெளி வந்து அவரது ரசிகர்களை குஷிப்படுத்தி வரும் நிலையில், அத்திரைப்படம் மற்றுமொரு சுவாரஷ்யமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார். இதைத் தொடர்ந்து, யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் ‘விஜய் 68’ உருவாக உள்ளது.
இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படத்தில் விஜய் இரட்டை சகோதரர்கள் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதில் ஒரு கதாபாத்திரத்துக்கு ஜோதிகாவும், மற்றொரு கதாபாத்திரத்துக்கு பிரியங்கா மோகனும் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
மேலும், நவம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதைத் தொடர்ந்து, ‘டெஸ்ட் போட்டோஷூட்’ அடுத்த வாரம் லண்டனில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படம் அரசியல் கதையை பின்னணியாகக் கொண்டு உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மாநாடு திரைப்படத்தில் மத அரசியலைப் வெங்கட் பிரபு பேசியிருந்த விதம் பெரிய வரவேற்பைப் பெற்றிருந்தது.







