முக்கியச் செய்திகள் உலகம் கட்டுரைகள்

உதவிக்கரம் நீட்டிய 11 வங்கிகள்; மீண்டெழுந்த பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கி – ஒற்றுமைக்கு உதாரணமான அமெரிக்கா!!


ரா.தங்கபாண்டியன்

கட்டுரையாளர்

அமெரிக்காவில் திவாலாகும் நிலையில் உள்ள ஒரு வங்கிக்கு , 11 வங்கிகள் இணைந்து இரண்டரை லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்து, அவ்வங்கி சரிவடையாமல் தூக்கி நிறுத்தியுள்ளன. இது குறித்த செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

அமெரிக்காவில் வங்கிகள் திடீரென திவாலாவதும், மீண்டும் எழுச்சி பெறுவதும், பிரிக்க முடியாத ஒன்றாகிவிட்டது. உலகப்பொருளாதார மந்தநிலை காலங்களில் மட்டுமல்ல, சாதாரண நேரங்களில் கூட அமெரிக்காவில் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் திடீர் எழுச்சியையும், வீழ்ச்சியையும் சந்திப்பது தொடர் கதையாகி வருகிறது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கொரொனா பெருந்தொற்றுக்கு பின்பு உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. தொழில் உற்பத்தி மற்றும் வர்த்தக கட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதற்கு முன்பு 2008 ஆம் ஆண்டு ஏற்பட்ட உலகப்பொருளாதார சரிவின் போது கோல்டு மேன் சாக்ஸ் உள்ளிட்ட பல பெரிய நிதியமைப்புகள் திவாலாகின.

இதையும் படியுங்கள் : ’ஷேட்ஸ் ஆஃப் வந்தியத்தேவன்’ – மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

கொரோனா கால கட்டத்திற்கு பின்பு, பணவீக்கத்தை சமாளிக்க அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்தியது. பத்திர முதலீடுகள் அதிகரித்ததால், வங்கி கடனை நம்பியிருக்கும் வர்த்தகம் அதிகப்படியாக பாதிக்கப்பட்டது. அடுத்ததாக வங்கிகள் திவாலாகும் நிலை ஏற்பட்டது.

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் மற்றும் நிதி சேவைகளை வழங்கி வந்த சிலிகான் வேலி வங்கி மற்றும் சிக்னேச்சர் வங்கிகள் திவாலானதாக அறிவிக்கப்பட்டது. வங்கிகள் திவால் செய்தியால், அமெரிக்கா மட்டுமல்ல , உலக நாடுகளும் பதறின. அடுத்து என்ன நடக்குமோ என அஞ்சின. இந்நிலையில் அமெரிக்காவில் வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக, அந்நாட்டு அரசு அமைப்பான FDIC மூலம், வாடிக்கையாளர்களின் டெபாசிட்டுக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.

சிக்னேச்சர் வங்கியை தொடர்ந்து, அமெரிக்க நாட்டின் பெரிய வங்கிகளில் ஒன்றான, பர்ஸ்ட் ரிபப்ளிக் என்ற வங்கியும் திவால் நிலைக்கு செல்லும் என கணிக்கப்பட்டது. போட்டியாளர் வங்கி எப்படி போனால் நமக்கு என எண்ணாமல், 11 வங்கிகள் இணைந்து, சுமார் இரண்டரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியில் முதலீடு செய்துள்ளன. அதனால், பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியின் வாடிக்கையாளர்களும், பங்குதாரர்களும் நிம்மதியடைந்தனர். இதனிடையே , மூடிஸ் அமைப்பு ஃபஸ்ட் ரிப்பப்ளிக் வங்கியின் டெபிட் ரேட்டிங்-ஐ மறு ஆய்வு செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

பர்ஸ்ட் ரிபப்ளிக் வங்கியை காப்பாற்ற பேங்க் ஆப் அமெரிக்கா, சிட்டி குரூப், ஜேபி மோர்கன் சேஸ், வெல்ஸ் பார்கோ ஆகியவை தலா 5 பில்லியன் டாலர் தொகையை பாதுகாப்பற்ற டெபாசிட் ஆக First Republic Bank-யில் டெபாசிட் செய்துள்ளது. இதைதொடர்ந்து கோல்டுமேன் சாச்ஸ், மோர்கன் ஸ்டான்லி தலா 2.5 பில்லியன் டாலர் முதலீட்டை செய்துள்ளன. பிஎன்சி வங்கி, US BANK உட்பட மொத்தம் 5 வங்கிகள் தலா 1 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன.

முதல் முறையாக ஒரு வங்கியை காப்பாற்ற பல வங்கிகள் ஒன்று திரண்டுள்ளன. இதன் மூலம் அமெரிக்க நிதியமைப்பு மோசமாவதில் இருந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது….

– ரா.தங்கபாண்டியன், நியூஸ் 7 தமிழ்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

குடியரசுத் தலைவர் தேர்தல் – ஜேடியு ஆதரவு யாருக்கு?

Mohan Dass

ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்; மக்கள் கோரிக்கை

Halley Karthik

பார்டர் கவாஸ்கர் கோப்பை 3வது டெஸ்ட்; இந்தியா பேட்டிங் தேர்வு

Jayasheeba