இந்தியா விளையாட்டு

சிஎஸ்கே இல்லை.. ஆர்சிபி தான் – ஶ்ரீசாந்த் ஆசை

நடப்பாண்டி ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி சாம்பியன் பட்டம் வெல்ல வேண்டும் என ஶ்ரீசாந்த் விருப்பம் தெரிவித்துள்ளார்.

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் சீஸன் வருகிற மார்ச் 31ம் தேதி தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணி மோத உள்ளன. இதற்கு முந்தைய சீஸன்களில் மும்பை, சென்னை, கொல்கத்தா, ஐதராபாத், ராஜஸ்தான், குஜராத் அணிகள் மட்டுமே சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. பெங்களூரு, டெல்லி, பஞ்சாப், லக்னோ உள்ளிட்ட அணிகள் சாம்பியன் பட்டம் வென்றதில்லை.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

கடந்த சீஸனில் அறிமுகமான குஜராத் அணி, யாரும் எதிர்பாராத வகையில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியிருந்தது. அதேபோல இந்தமுறையும் புதிய அணி சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது. முக்கியமாக ஒவ்வொரு ஆண்டும் கோப்பை வேட்கையுடன் களமிறங்கும் பெங்களூரு அணி ஏமாற்றத்தையே சந்தித்து வருகிறது. சென்னை, மும்பை அணிகளுக்கு பிறகு சிறந்த வீரர்கள், பிசினஸ் இருந்தாலும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

இதையும் படிக்க: ’ஷேட்ஸ் ஆஃப் வந்தியத்தேவன்’ – மேக்கிங் வீடியோவை வெளியிட்ட பொன்னியின் செல்வன் படக்குழு

இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், “இந்தமுறை சென்னை அணி கோப்பையை வெல்லும் என்பதில் நம்பிக்கை இல்லை. ஒரே ஒரு மல்லு (மலையாளி) சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக இருப்பதால் நான் அந்த அணிக்கு ஆதரவளிக்கிறேன். அதேநேரத்தில் ஆர்சிபி அணி கோப்பையை வெல்ல வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்த கோலி ஐபிஎல் கோப்பையை தன் கையில் ஏந்த வேண்டும்.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

அசுர வேகத்தில் பரவும் கொரோனா: ஹர்திக் பாண்டியாவின் எச்சரிக்கை ட்வீட்

EZHILARASAN D

சர்வதேச மகளிர் தினம்; சிறப்பு டூடுலை வெளியிட்ட கூகுள் நிறுவனம்

Jayasheeba

உ.பி. சட்டசபையில் வீடியோ கேம் விளையாடிய பாஜக எம்எல்ஏ-வீடியோ வெளியிட்ட சமாஜ்வாதி கட்சி

G SaravanaKumar