முக்கியச் செய்திகள் சினிமா

இவரின் பயோபிக்கில் நடிக்க ஆசை – நடிகர் ராம்சரண்

விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக ராம்சரண் கூறியுள்ளார்.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான ‘RRR’ படத்தின் வெற்றி நடிகர் ராம்சரணுக்கு இந்தியளவில் மிகப்பெரிய மார்க்கெட்டை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ‘நாட்டு நாட்டு’ பாடல் ஆஸ்கர் விருதை பெற்றுள்ள நிலையில் ராம்சரண் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. ராம்சரண் தற்போது இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ஓர் படத்தில் நடித்து வருகிறார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதையும் படிக்க: காதலில் தோல்வி அடைந்தால் இன்சூரன்ஸா..? – எப்புட்ரா..??

இயக்குநர்களின் மோஸ்ட் வான்டட் நடிகராகியுள்ளதால் அடுத்தடுத்து மிகப்பெரிய படங்களில் கமிட் ஆகி வருகிறார் ராம்சரண். அண்மையில் ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், ‘எனக்கு விளையாட்டு மிகவும் பிடிக்கும். விளையாட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எந்த விளையாட்டை மையப்படுத்திய கதையாக இருந்தாலும் அதில் நடிக்க நான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கிறேன்.” என்றவரிடம் “கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பயோபிக்கில் நடிக்க விருப்பமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்க மிகவும் உற்சாகத்துடன் பதிலளித்த ராம்சரண், “அற்புதம். விராட் ஊக்கமளிக்கக் கூடிய வீரர். வாய்ப்பு அமைந்தால் நிச்சயம் நடிப்பேன். தோற்றத்திலும் எங்களுக்குள் ஒற்றுமை உள்ளது.” என்று கூறியுள்ளார்.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

கீவ் நகரில் ரஷ்ய படைகள் குறைப்பு என்பது ஏமாற்றும் செயல் – அமெரிக்கா

Arivazhagan Chinnasamy

நாட்டின் வெளியுறவுக் கொள்கை, அதானியின் வணிக கொள்கையாக மாறிவிட்டது – மக்களவையில் ராகுல்காந்தி விமர்சனம்

G SaravanaKumar

வி.கிருஷ்ணமூர்த்தியின் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல்!

Web Editor