நியூஸ் 7 தமிழின் ‘எக்ஸ்பிரஸ் செயலி’

நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் புதிய முயற்சியாக எக்ஸ்பிரஸ் செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார். கடந்த 2014ம் ஆண்டில்…

நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனத்தின் புதிய முயற்சியாக எக்ஸ்பிரஸ் செயலியை நாளை அறிமுகப்படுத்துகிறது. இந்த செயலியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைக்கிறார்.

கடந்த 2014ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நியூஸ் 7 தமிழ் செய்தி நிறுவனம் குறிப்பாக ஜல்லிக்கட்டு போராட்டம், புயல் மற்றும் இதர இயற்கை பேரிடர் காலங்களில் மக்களுடன் துணை நின்று வந்திருக்கிறது.

இதன் தொடர்ச்சியாக சாமானியர்களின் குரல்களை, கோரிக்கைகளை பொது வெளியில் கொண்டு வருவதன் ஒரு பகுதியாகவும், தொடர்ந்து முன்னேறிக்கொண்டிருக்கும் தமிழ்ச் சமூகத்தின் ஒரு அங்கமாகவும் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குரலாய் 8வது ஆண்டில் நியூஸ் 7 தமிழ் அடியெடுத்து வைத்துள்ளது.

டிவிட்டர், பேஸ்புக், ஷேர்சாட், இன்ஸ்டாகிரம் மற்றும் வலைத்தளங்களில் தொடர்ந்து சிறப்பாக இயங்கி வருகிறது. குறிப்பாக டிவிட்டரில் தமிழ் செய்தி ஊடகத்திலேயே நமது நிறுவனம்தான் முதலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டமைப்பில் மேலும் ஒரு புதிய முயற்சியாக ‘எக்ஸ்பிரஸ் செயலியை‘ நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இதன் மூலம் சர்வதேசம் தொடங்கி தேசம், மாநிலம், மாவட்டம், கிராமம் வரையிலான செய்திகளை நொடிப் பொழுதில் விரல் நுணியில் கொண்டு வந்து சேர்க்கிறது.

செய்திகளில் தெளிவும் உண்மைத் தன்மையையும் தன்னகத்தே கொண்டு பயணித்து வரும் நியூஸ் 7 தமிழுக்கு இத்தமிழ் சமூகம் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டும் என்று பொறுப்பும் பொதுநலத்துடனும் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.