மதுரை பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற விக்கிரமராஜா கோரிக்கை

சென்னையை போன்று மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார். மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா…

சென்னையை போன்று மதுரை மாநகர் பகுதியில் உள்ள சுங்க சாவடிகளை அகற்ற முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்தார்.

மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த விக்கிரமராஜா தெரிவித்ததாவது:

வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு மணிமண்டபம் காட்டுவதாக அறிவித்துள்ளதற்கு தமிழக அரசிற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்

. வணிகர்கள் நல வாரிய சேர்கையை டிசம்பர் வரை நீட்டிக்க வேண்டும். குற்றாலம், ஓக்கேனக்கல், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட அனைத்து சுற்றாலத் தளங்களும் முழுமையான தளர்வுகளுடன் திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வணிகர்கள் 2 தவணை தடுப்பூசி கட்டாயம் செலுத்தி கொள்ள அறிவுறுத்தியுள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் சுங்கச்ச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து விரைவில் வணிகர் பேரவை சார்பில் போராட்டம் நடத்தப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக முடங்கியிருந்த வணிக நல வாரியம் புத்துயிர் பெற்றுள்ளது. பொதுமக்கள் பாதிக்காத வகையில் பொதுத்துறை நிறுவனங்களை குத்தகைக்கு விடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு விக்கிரமராஜா தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.