நாட்டில் புதிதாக 10,549 பேருக்கு கொரோனா தொற்று

நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருவதாக…

நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 133 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நாட்டில் புதிதாக 10 ஆயிரத்து 549 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 9 ஆயிரத்து 868 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரத்து 830 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரே நாளில் கொரோனா தொற்றால் 488 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இதனால் பலி எண்ணிக்கை 4 லட்சத்து 67 ஆயிரத்து 468ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், நாடு முழுவதும் இதுவரை 120.27 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.