முக்கியச் செய்திகள் இந்தியா சினிமா

பிரபல நடிகைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை

மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல இந்தி நடிகைக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை அளிக்கப்பட இருக்கிறது.

பாலிவுட்டின் மூத்த நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், கடந்த ஜூலை மாதம் கால மானார். இந்நிலையில் அவர் மனைவியும், மூத்த நடிகையுமான சாய்ரா பானுவும் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சாய்ரா பானு, நடிகர் ஆர்யா மனைவியான சாயிஷாவுக்கு பாட்டி.

இந்நிலையில் 3 நாட்களுக்கு முன் சாய்ரா பானுவுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடு த்து மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனு மதிக்கப் பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு ஆஞ்சியோகிராபி சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை என்றும் தெரிவித்துள்ளனர். சரியான நேரத்தில் அவருக்கு ஆஞ்சியோ செய்யப்படும் என்றும் முதலில் அவருடைய சர்க்கரை அளவை நாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

நடிகர் தீப்பெட்டி கணேசன் மாரடைப்பால் மரணம்!

Halley karthi

ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவிலிருந்து குணமடைவு!

Gayathri Venkatesan

இன்று முதல் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை!

Niruban Chakkaaravarthi