முக்கியச் செய்திகள் கொரோனா

தமிழ்நாட்டில் தொடர்ந்து குறைந்து வரும் கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் புதிதாக 739 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது. சில நாட்களுக்கு முன் 800-க்கும் கீழாக குறைந்தது தொற்று கடந்த 24 மணி நேரத்தில், 739 ஆக தொற்றுப் பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27,23,245 ஆக அதிகரித்துள்ளது. தொற்றுப் பாதிப்பில் இருந்து இன்று 764 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 26,78,371 ஆக அதிகரித்துள்ளது.

தொற்றுப் பாதிக்கப்பட்டவர்களில் 8,442 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் கடந்த 24 மணி நேரத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 36,432 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டங்களை பொறுத்தவரை சென்னையில் 107 பேருக்கும் கோயம்புத்தூரில் 112 பேருக்கும் தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை, கோவையில் தொற்றுப் பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தலா 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement:
SHARE

Related posts

உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!

Halley karthi

பால் கொள்முதல் விலை உயர்வு: தமிழக அரசு!

இன்று 1,289 பேருக்கு கொரோனா தொற்று பாசிடிவ்!

Gayathri Venkatesan