ஜெய்பீம் திரைப்படத்தில் நடித்த சூர்யாவையும், இயக்குநர் ஞானவேலையும் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணு பாராட்டியுள்ளார்.
சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு பார்த்துள்ளார். பின்னர் படத்தை தயாரித்து, முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தள்ள சூர்யா, இயக்குநர் ஞானவேல் ஆகியோரை நேரில் அழைத்துப் பாராட்டினார்.
அப்போது நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமாரும் உடனிருந்தார். ஜெய்பீம் திரைப்படத்திற்கு ஒருபுறம் எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், பல்வேறு தரப்பினர் படத்தை பாராட்டி ஆதரித்து வருவது குறிப்பிடத்தக்கது.








