கன்னியாகுமரி, குகநாதீஸ்வரர் ஆலயத்தில் கோடை வெப்பம் நீங்கி
மழை வர 1008 இளநீர் கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.
கன்னியாகுமரி , ரயில் நிலையம் அருகே தமிழகத்தில் பிரசித்தி பெற்ற
சிவாலயங்களில் ஒன்றாகவும், ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த குகநாதீஸ்வரர்
ஆலயம் உள்ளது. இங்கு மூலவர் லிங்க வடிவில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
இக்கோயிலில் இன்று கோடை வெப்பம் நீங்கி மழை பெய்யவும் , அதன் மூலம்
விவசாயம் பெருகி மக்கள் செழிப்புடன் வாழ வேண்டி, 1008 இளநீர் கொண்டு
அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் கொண்டு வந்த இளநீர் மூலம் மூலவருக்கு
சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து இறைவன்
அருள் பெற்றனர்.
—கு.பாலமுருகன்







