கேரள மாநிலம், கொல்லம் பகுதியில் கிணற்று நீரில் தீ பற்றி எரிந்து வருவதால் பொது மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் கொல்லத்தை அடுத்த அஞ்சாலுமூட்டு பகுதியில் வீடுகளின் குடிநீர் கிணற்றில் உள்ள தண்ணீரில் தீ பற்றி எரிவதால் அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் கொல்லம் மாவட்டம் அஞ்சாலுமூட்டு பகுதியில் வசித்து வரும் ஸ்வர்ணம்மா என்பவரின் வீட்டு கிணற்றில் உள்ள தண்ணீர் தீ பற்றி எரிந்த காட்சி இணையதளங்களில் வெகுவாக பரவி வந்தது.
இதை தொடர்ந்து அஞ்சாலுமூட்டு பகுதியில் உள்ள 60 மேற்பட்டோரின் வீட்டு கிணற்று நீரில் தீ பற்றி எரிந்த காட்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்துள்ளது. இதற்கிடையே அப்பகுதி பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
இச் சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அருகில் உள்ள பெட்ரோல் பம்பில் கசிவு ஏதும் ஏற்பட்டு உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர். இந் நிலையில் அப்பகுதியில் உள்ள பொது மக்கள் விரைந்து குடிநீரை சீர்ப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
—-கோ. சிவசங்கரன்







