புதுச்சேரியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
புதுச்சேரியில் எந்தவித அரசு உதவிதொகையும் பெறாத வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் துவக்க விழா கதிர்காமம் பகுதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வருகிறது.
துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் பங்கேற்று தற்போது இந்த திட்டத்தை துவக்கி வைத்தனர். வறுமை கோட்டிற்கு கீழ் எந்த வித அரசு உதவிதொகையும் பெறாத 21 வயது முதல் 55 வயது வரை உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் இன்றிலிருந்து வழங்கப்பட உள்ளது.
தற்போது நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பயனாளிகள் பங்கேற்றுள்ளனர். இத்திட்டம் மூலம் 70,000 குடும்ப தலைவிகள் பயன்பெற உள்ளனர்.







